தேசிய செய்திகள்

தாம் எடுத்த முடிவை கிடப்பில் போட்டு தலைமைகளின் முடிவுக்காக காத்திருக்கும் முஸ்லிம் சமூகம்.

imagesCA9H888W

முள்ளிப்பொத்தானை ஜபருல்லாஹ் ஜனாதிபதித்தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்பட்ட தினம் தொடங்கி, வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒவ்வொருவரும் தங்களின் ஆதங்கங்களையும் ஆதரவுகளையும் வெளிப்படையாவும்  மறைமுகமாகவும் ஆங்காங்கே சிலேடையாக தமது கருத்துக்களை சிலரும் தெரிவித்து வருவதை இங்கு நாம் வெகுவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இவர்களின் கருத்துகளுக்கு களம் அமைத்துக்கொடுப்பது போல் பல சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் தமது பங்களிப்பை சிறப்பாகச் செய்து வருகின்றன. நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலை ஓர் பொதுவான அடிப்படையில் நோக்கினால், இத்தேர்தலில் ஜனநாயகத்தின் குறிக்கோள் ஒன்றாக இருப்பினும் மக்களின் ... Read More »

முழுமையில்லாத உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்திட்டுள்ளோம்-மனோ

unnamed

பழுளுல்லாஹ் பர்ஹான். இன்றைய தினம் இந்த நாட்டிலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இங்கு பொது எதிரணியாக ஒரு புரிந்துணர்வு உடபடிக்கையில் கையெழுத்திட்டுள்ளோம்.  இந்த உடன்படிக்கை இந்நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்க கூடிய  தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் அடையாளப்படுத்தவில்லை. எங்கள் தேசிய அபிலாசைகளுக்கு முழுமையான தீர்வுகளை தரவில்லை. ஆனால், ஒரு ஜனநாயக  அடிப்படை இங்கே காணப்படுகிறது. அது எமது எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் எமது பயணத்துக்கு வழியமைக்குமென நாம் நம்புகின்றோம். ஆகவே தான், நம்பிக்கை வைத்து முழுமையில்லாத உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் ... Read More »

எதிரணிகள் வகுத்துள்ள வியூகங்கள்.

hghgjh512

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் இலங்கை அரசியல் இன்று என்ன நடக்கும்? நாளை என்ன எனக்கும்? என சுவாரசியத்திற்கும் பரபரப்பிற்கும் மத்தியில் தனது பயணப் பாதையை அமைத்திருப்பது யாவரும் அறிந்ததே! அரசாங்கத்தை வீழ்த்த அரசாங்க அம்பே பயன்படுத்தப்படும். அதுவும் அமைச்சராக இருந்த மைத்திரிபாலவே வருவாரென யாரும் கிஞ்சித்தேனும் சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை. வெற்றிக்கனி முதலை விட தனக்கருகில் பல மடங்கு அண்மித்து வந்து, தலை விரித்தாடுவதால் தானே அதனை சுவைக்க வேண்டுமென்ற ஆசையில் ஐ.தே.க யும் அதன் தலைவரும் அவாவோடு காத்திருந்த போதும், பொது ... Read More »

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் NFGGயின் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை கொழும்பில்

download

ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி. ஆட்சி முறை மாற்றமொன்றிற்கான வேலைத்திட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கத்தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை 02.12.2014 செவ்வாய்க்கிழமை, கொழும்பு புதிய நகர மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில், பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் இஸ்தாபககர் மாதுளுவாவே சோபித தேரர், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணியின் ... Read More »

பொது எதிரணியின் MOUவில் NFGGயும் கைச்சாத்திட்டது

MOU (1)

ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி. பொது எதிரணிக்கூட்டமைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இன்று கைச்சாத்திட்டது. கொழும்பு விஹாரமகா தேவி திறந்தவெளி அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், NFGGயின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை முன்னிறுத்தியும், இந்நாட்டின் ஆட்சிமுறை மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காகவும் ஒன்று சேர்ந்துள்ள பொது எதிர்கட்சிகளின் கூட்டமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலான  அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. ‘ஒன்று படுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ ... Read More »

மரணிக்கும் வரை உங்களுடனேயே நாம்! உங்கள் முடிவுடன் நாம் கைகோர்ப்போம்-வவுனியா முஸ்லிம்கள்

7M8A5747

ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் யாரை ஆதரிப்பதென்று தீர்மானிக்கின்றாரோ அத்தீர்மானத்திற்கு நாம் கட்டுப்பட்டு பூரண ஒத்துழைப்பு வழங்குவோமென வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் மேற்படி உறுதி மொழியை வழங்கியுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபத்தேர்தலில் எவரை ஆதரிப்பது தொடர்பில் வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்களின் கருத்தறியும் கூட்டம் வவுனியா சூடுவெந்தபுளவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அ.இ.ம.கா தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் முன்னிலையில் இடம்பெற்ற இக்கருத்தறியும் கூட்டத்தில் கருத்துத்தெரிவித்த வவுனியா ... Read More »

காத்தான்குடி-அல்-பலாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் 4 வது பாலர் கலை விழா-படங்கள்.

1-DSC_0392-150x150

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி (ISDA) இஸ்றா சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் காத்தான்குடி அல்-பலாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் 4 வது பாலர் கலை விழா 30-11-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இஸ்றா சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஆரிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டோர். இதன் போது பாலர் கலை விழாவில் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை செய்த பாலர்களும் அவர்களை சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களும் அதிதிகளினால் பரிசும், ... Read More »

தேசிய மீலாத் விழா கலாசார நிகழ்ச்சியில் காத்தான்குடி ஸாவியா தேசிய மட்டத்தில் முதலிடம்

1-DS-150x150

பழுலுல்லாஹ் பர்ஹான் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2014 தேசிய மீலாத் விழா போட்டியில் ஆரம்பப்பிரிவு கலாசார நிகழ்ச்சி குழு ஹஸீதா போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவிகள் பெற்றுள்ளனர். இதற்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. இதன் போது, இவர்களுக்கான பரிசை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸமீல் நளீமி வழங்கி வைத்தார். இங்கு இடம்பெற்ற 2014 தேசிய மீலாத் விழா போட்டி ... Read More »

உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் பிரச்சினைகளுக்குத்தீர்வு காண முடியாது–பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

2-DSC_0053

பழுலுல்லாஹ் பர்ஹான் உணர்வூகளாலும் உணர்ச்சிகளாலும் ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாதென பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 29 நேற்று சனிக்கிழமை ஆரையம்பதி பாலமுனைப் பிரதேசத்தில் 150 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீரிணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரவித்த பிரதியமைச்சர், உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் தூண்டப்பட்டு, ஓரு தமிழ் சமூகம் பட்ட துன்பம் துயரம் எமக்குத் தெரியும். இந்த தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலைச செய்து, ... Read More »

ஸ்ரீலங்கா ஹிறா பௌன்டேஷனால் பாலமுனையில் குடி நீரிணைப்புக்கான உதவி

4-DSC_0070

பழுலுல்லாஹ் பர்ஹான் ஸ்ரீலங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தின் நிதியுதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசதி குறைந்த குடும்பங்கள் மற்றும் பள்ளிவாயல்கள் ஆகியவற்றிற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடி நீர் இலவச இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ், மண்முனைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் வசதி குறைந்த 150 குடும்பங்களுக்கு இலவச குடி நீரிணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு 29-11-2014 இன்று சனிக்கிழமை பாலமுனை அலிகார் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாலமுனை அபிவிருத்திக்குழுவின் தலைவர் எம்.எல்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தின் ... Read More »