விளையாட்டு செய்திகள்

வெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர்

WhatsApp Image 2017-11-11 at 10.59.23 PM

முஹம்மது ஷமான் Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வறிய மக்களுக்கான நலத்திட்ட நிதி சேகரிப்புக்கான கிறிக்கட் சுற்றுத்தொடர் கடந்த 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக QATAR NEW SALIYA CRICKET GROUND இல் இடம்பெற்றிருந்தது. 16 அணிகள் கலந்து கொண்டிருந்த இந்த SIX A SIDE சுற்றுத்தொடரின் இறுதியாட்டத்தில் NEW SUN STAR அணியை வீழ்த்தி குமு குமு விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி பெற்று சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மேலும், மிகவும் சிறப்பாக இச்சுற்றுத்தொடர் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு ... Read More »

கிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி

23201600_1496184987134787_1661177504_n

ஆரிப் எஸ்.நளீம் மூத்த விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்குமுகமாக கதுருவெல BLUE STAR விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நடாத்திய அணிக்கு அறுவர் கொண்ட நான்கு ஓவர்கள் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று 03.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை முஸ்லிம் கொலனி சியானா அரிசி ஆலை எதிரே நடைபெற்றது. 16 அணிகள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டியில், RED SUN அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. போட்டி நிறைவில் முப்பது மூத்த வீரர்களுக்கும் ஆறு இளைய வளர்ந்து வரும் வீரர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். ஆட்ட நாயகனாக RED ... Read More »

கிண்ணத்தை வென்றது கதுருவெல பெரடைஸ் அணி

23140337_1492258417527444_1294985145_n

ஆரிப் எஸ்.நளீம் தமன்கடுவை பிரதேச செயலகப்பிரிவில் கதுருவெல மாணிக்கப்பிட்டி புதிய மைதானத்தில் நடைபெற்ற T 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தெரிவான கிங் ஸ்டார் மற்றும் பெரடைஸ் அணிகள் நேற்று (29.10.2017)  மோதிக்கொண்டன. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற கல்லேல கிங் ஸ்டார் அணித்தலைவர் தாம் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக விருப்பம் தெரிவித்தார். இதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங் ஸ்டார் அணி 18 ஓவர்கள் நிறைவில் 6 விக்கற்றுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு 153 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ... Read More »

அம்பாறை மாவட்ட விளையாட்டுத்தொகுதியின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த பிரதியமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

IMG_0922

(அகமட் எஸ். முகைடீன்) விளையாட்டுத்துறை அமைச்சின் 290 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அம்பாறையில் அமைக்கப்படும் அம்பாறை மாவட்ட விளையாட்டுத்தொகுதியின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஒப்பந்த நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில்  திறந்து வைக்கப்படவுள்ள குறித்த மாவட்ட விளையாட்டுத் தொகுதியின் வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக்குழு இன்று (28) சனிக்கிழமை நேரடி விஜயம் செய்த ... Read More »

அபிவிருத்திக்குழுவின் முயற்சியில் மீராவோடை வைத்தியசாலைக்கு மூன்று மாடிக்கட்டடம்

IMG-20171025-WA0067

எம்.ரீ. ஹைதர் அலி மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முயற்சியினால் மூன்று மாடிக் கட்டடத்திற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா அவர்களின் தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதாரப் பிரதியமைச்சர் கௌரவ பைஸல் காசிம் அவர்களை இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக 2017.07.23ஆந்திகதி – ஞாயிற்றுக்கிழமை நிந்தவூரிலுள்ள அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர். அத்துடன் இச்சந்திப்பில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் உமர் அலி ... Read More »

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் விளையாட்டுபகரணங்கள் கையளிப்பு

1d2d3a1c-4956-46f1-b83d-859b327e836b

(முகம்மட் சஜீ) காத்தான்குடி குபா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘குபா வெற்றிக்கிண்ண’ பரிசளிப்பு விழா மற்றும் விளையாட்டுப்பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப்பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது, தனது 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியெதுக்கீட்டிலிருந்து குபா விளையாட்டுக்கழகத்துக்கான விளையாட்டுபகரணங்களை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ... Read More »

அஷ்ரஃப் கிண்ணத்தை வென்று சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக்கழகம் சம்பியன்

IMG_0862

(அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இஸ்தாபகத்தலைவர் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஹர்ரம் ஐக்கிய உதைப்பந்தாட்டக்கழகம் நடாத்திய அஷ்ரஃப் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணம் 2017 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக்கழகத்தினர் தனதாக்கிக் கொண்டனர். அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட குறித்த கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வு நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை பொது மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது நிந்தவூர் அட்வெஞ்சர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ... Read More »

எவரெடி வெற்றிக்கிண்ண மின்னொளி உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்

IMG_0671

(அகமட் எஸ். முகைடீன்) சாய்ந்தமருது டொப் ஜெ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் மருதமுனை எவரெடி விளையாட்டுக்கழகம் நடாத்தும் எவரெடி வெற்றிக்கிண்ண மின்னொளி உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு மருதமுனை மசூர் மௌலான விளையாட்டரங்கில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எவரெடி விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளருமான எம்.ஐ.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வாரம்பப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது டொப் ... Read More »

பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம்

3

(அகமட் எஸ். முகைடீன்) பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தொடரின் அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு ஹில்டென் ஹோட்டலில் இன்று (5) புதன்கிழமை நடைபெற்றது. பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் தலைவி லுயிஸ் லிவிங்ஸ்டென் மார்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின் உதவித்தலைவர் புரூச் றிச்சட் றோபட்சன், இலங்கை மக்கள் வங்கியின் தலைவரும் பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான உதவித்தலைவருமான ஹெமசிறி பெர்னான்டோ உள்ளிட்ட பொதுநலவாய ... Read More »

அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி பொத்துவில் றைஸ் ஸ்டார் வெற்றி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்

IMG_9850

(அகமட் எஸ். முகைடீன்) மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 17 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு பொத்துவில் டில்ஷாத் அஹமட் பவுண்டேஷன் நடாத்திய தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த கிண்ணம் 2017 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை பொத்துவில் றைஸ் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினர் தனதாக்கிக் கொண்டனர். பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 14 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட குறித்த கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வு நேற்று (30) சனிக்கிழமை மாலை பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. ... Read More »