விளையாட்டு செய்திகள்

ஏறாவூர் விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி

WhatsApp Image 2017-03-05 at 7.28.24 PM

இவ்வாண்டுக்கான ஏறாவூர் பிரிவிலுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான அணிக்கு அறுவர் கொண்ட  ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட  கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இம்மறை சம்பியன் கிண்ணத்தை  அக்கா உக்கா விளையாட்டுக்கழகம் வெற்றிக்கொண்டது. ஏறாவூர் பக்தாத் கிரிக்கட்  மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஜின்தாபாத் மற்றும் அக்கா உக்கா அணிகள் களம் கண்டன. நாணயச்சுழற்சியில் வென்ற ஜின்தாபாத் அணி முதலில் துடுப்படுத்தாட களமிறங்கியது. இதனடிப்படையில்  முதலில் துடுப்படுத்தாடிய ஜின்தாபாத்  அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில் 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஜின்தாபாத் அணி சார்பில் மொஹமட் பர்சான் 20 ஓட்டங்களைப்  பெற்றுக்கொண்டார். பந்து  ... Read More »

கிழக்கு ஸ்பீட் T-20 முதலாவது போட்டியில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி: பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பதில் அமைச்சர் ஹரீஸ்

1

(ஜி.முஹம்மட் றின்ஸாத் ) கிழக்கு கிரிக்கெட் வரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாணத்தில் பலம் பொருந்திய 32 உள்ளூர் கிரிக்கெட் கழக அணிகள் மோதிக்கொள்ளும் சர்வதேச தரத்திலான மாபெரும் கிரிக்கட் சமரான ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப்போட்டி  2017.03.05ம் திகதி அன்று சாய்ந்தமருது பொது ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் என்பன மோதின. இதில் முதலில் துடுப்படுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் மொத்தமாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து ... Read More »

‘ஸ்பீட் ரீ-20 வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டிகள்: ஆரம்பித்து வைத்தார் பிரதியமைச்சர் ஹரீஸ்!

3

(ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன்) கிழக்கின் மாபெரும் சமராக இடம்பெறவுள்ள ‘ஸ்பீட் ரீ-20 கிரிக்கெட் வெற்றிக்கிண்ணம் -2017′ கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு ஞாயிறுக்கிழமை (05) சாய்ந்தமருது வொலிவேரியன் மைதானத்தில் மிகக்கோலாகலமாக ஆரம்பமானது. சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழக பொதுச்செயலாளர் அலியார் பைஸரின் ஏற்பாட்டிலும், அதன் தலைவர் ஏ.ஆதம்பாவா தலைமையிலும் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வு சுற்றுப்போட்டிக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டார். ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் ஆலோசகரும், ஓய்வுபெற்ற மாவட்ட ... Read More »

கட்டாரில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி

17029035_1438793549472897_1337898711_n

எம்.ஐ.லெப்பைத்தம்பி ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை பாடசாலைக்கு அவசியத்தேவையான பஸ் வண்டியோன்றினைக் கொள்வனவு செய்து வழங்கும் நோக்கில் நிதி சேகரிப்புக்காக பல்வேறு முன்னெடுப்புகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடரில், கல்குடாவை மையப்படுத்தி கட்டாரிலுள்ள சகல விளையாட்டுக்கழகங்களின் பூரண ஒத்துழைப்பு, அனுசரணையுடன் கட்டாரிலுள்ள சுமார் 24 க்கும் அதிகமான கழகங்கள் பங்கு பெறும் கிரிக்கட் சுற்றுப்போட்டித் தொடரொன்றை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம், 14ம் திகதிகளில் கட்டாரிலுள்ள சர்வதேச தரம் ... Read More »

கல்குடாவில் கிரிக்கெட் சுவரொட்டி.

IMG-20170223-WA0180

-எச்.எம்.எம்.பர்ஸான் - நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடவுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலை நிர்வாகத்தினர் பல்வேறு வேளைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்று அன்மையில் பாடசாலையின் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் பல அணிகள் பங்கு பற்றின அதில் 2001மற்றும் 2010ம் ஆண்டிக்கான க.பொ.த சாதாரண தர பழைய மாணவ அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை காத்துக் கொண்டிருக்கும் இறுதிப் போட்டியானது நாளை ... Read More »

கிழக்கின் வரலாற்றில் சர்வதேச தரத்திலான மாபெரும் கிரிக்கெட் சமர் ஸ்பீட் T-20

தசக்

(முஹம்மட் றின்ஸாத்) கிழக்கு கிரிக்கெட் வரலாற்றில் முதற்தடவையாக உள்ளூர் கிரிக்கெட் கழக அணிகள் மோதிக்கொள்ளும் சர்வதேச தரத்திலான மாபெரும் சமரான ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 24ஆம் திகதி முதல் ஏப்ரல் 14ஆம் திகதி வரை தொடர்ச்சியாக சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இந்த சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலுமிருந்து (அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை) பிரபல்யமான 32 கழக அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன. இச்சுற்றுத்தொடரில் வெற்றி பெறுகின்ற அணி்க்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் மிரம்மாண்டமான வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளதுடன், இரண்டாமிடத்திற்கு ... Read More »

உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டுப் போட்டிக்கு வெளிநாடு செல்லும் இலங்கை அணிக்கு றிப்கான் பதியுதீன் நிதியுதவி

WhatsApp Image 2017-02-16 at 4.13.07 AM(1)

ARA.றஹீம் நேற்றிரவு (15) உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டுப்போட்டி நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து சென்ற 21 வீர வீராங்கணைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினரும் வடமாகாண சபையின்  பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் தன்னால் இயன்ற உதவியை நேரடியாக இலங்கை விமான நிலையத்திற்குச் சென்று வீர வீராங்ககணைகளை ஊக்குவிக்குமுகமாகவும் அவர்களைச் சந்தோசத்தோடு வழியனுப்புமுகமாகவும் தனது சொந்த நிதியிலிருந்து சிறுதொகைப் பணத்தை வழங்கி வைத்ததோடு, தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி மாணவர்களின் ... Read More »

காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய தலைவராக மீண்டும் எஸ்.எம்.பீ.எம். றமீஸ்

DSC00903

காத்தான்குடி ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத்தெரிவும்   கடந்த 10.02.2017ம் திகதி வெள்ளிக்கிழமை  பி.ப 7.00 மணிக்கு காத்தான்குடி கடற்கரை ”ஒரேன்ஞ் பிளேசில்” தலைவர் எஸ்.எம்.பீ.எம். றமீஸ் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் விஷேட அதிதிகளாக காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எம்.எஸ்.எம். ஸபி, காத்தான்குடி மின்சார சபையின் மின் அத்தியட்சகர் பொறியியலாளர் எம்.எம்.நவ்பல் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பமாக ”இஸ்லாமிய நெறிப்படுத்தலில் விளையாட்டு எவ்வாறு அமைய வேண்டும்” எனும் தலைப்பில் மார்க்க உபன்னியாசம் இடம்பெற்றது. மேற்படி ... Read More »

கிழக்கிலிருந்து தேசிய அணிக்கு வீரர்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும்

வ்ப்ப்

கிழக்கான் அஹமட் மன்சில் கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது என்பது அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் அறிய முடிகிறது. உதைபந்து, கிறிக்கட் ஆகிய விளையாட்டுக்களே கிழக்கு மாகாணத்தில் பிரசித்தம் பெற்று விளங்குகின்றன. கிழக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறை வீழ்ச்சியடைந்திருப்பதற்கான பிரதான காரணம் விளையாட்டின் மூலம் தொழில் சார்ந்த அடைமானங்கள் குறைவாக எட்டப்படுவதாகும். கிழக்கு மாகாணத்திலிருந்து தேசிய அணிக்கு வீரர்கள் இலங்கை வரலாற்றில் இன்னும் தெரிவு செய்யபடவில்லை. உதைப்பந்தாட்டத்துறையில் குறிப்பிட்ட சில வீரர்கள் தேசிய அணிக்கு உள்வாங்கப்பட்டிருந்தாலும், இலங்கை தேசிய கிறிக்கட் ... Read More »