விளையாட்டு செய்திகள்

பிலிப் ஹியூஸ் இறுதிப்பயணம்.

10406937_972632456098414_719274526067093895_n

பவுன்சர் பந்து வீச்சில் தலையில் படுகாயமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அதனையொட்டி நடைபெறும் வழியனுப்பு நிகழ்வில் பலரும் பேசி வருகின்றனர். நியூ சவுத் வேல்ஸ் அருகிலுள்ள அவரது சொந்த ஊரான மேக்ஸ்வில்லி உயர் நிலை பள்ளியில் நடைபெற்று வரும் இந்த வழியனுப்பு நிகழ்வில், இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி, மேலாளர் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் டங்கன் ப்ளெட்சர் ஆகியோர் உள்பட 5000 பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி ... Read More »

IPL லிலிருந்து சென்னை சுப்பர் கிங்ஸ் நீக்கம்?

d017d8116d260f1cbecb5045b81d5652

(OU) சூதாட்டப் புகாரில் உரிமையாளர்கள் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளை ஐ.பி.எல் தொடரிலிருந்து நீக்க வேண்டுமென்று அவ்வமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி கூறியுள்ளார். ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் (சிஎஸ்கே-வின் நிர்வாகத்தலைவராக இருந்தார்) மற்றும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. முட்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும் இவ்விருவர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது. இது குறித்து கருத்துத்தெரிவித்துள்ள ... Read More »

கிழக்கு மாகாண கிரிக்கட் விளையாட்டுத்துறை முன்னேற்ற மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,பாகிஸ்தான் பொறியியல் கவுன்சில் தூதுக்குழுவுடன் சந்திப்பு

DSC_9105

எம்.எச்.எம். நளீர்  கிழக்கு மாகாணத்தில் கிரிக்கட் விளையாட்டுத்துறையை முன்னேற்றும் வகையில், மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கையின் மற்றுமொரு கட்டமாக பாகிஸ்தான் பொறியியல் கவுன்சில் தூதுக்குழுவொன்று அமைச்சரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. மாகாண அமைச்சரின் அழைப்பின் பேரில், கொழும்பு வந்த இஸ்லாமிய நாடுகளின் பொறியியலாளர் சம்மேளனத்தின் துணைத்தலைவரும், பாகிஸ்தான் பொறியியல் கவுன்சிலின் தலைவருமான பொறியியலாளர் செய்யித் அப்துல் காதிர் ஷா தலைமையிலான தூதுக்குழுவினர், கிழக்கின் விளையாட்டுத்துறை வளர்ச்சிபெற உதவுவதாக உறுதியளித்தனர். தாம் ஆக்கபூர்வமான உதவிகளையும் பங்களிப்புக்களையும் ... Read More »

இந்திய அணி இலங்கையுடனான தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

India-vs-Sri-Lanka-T20-Match-Live-150x150

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது. இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக கேதர் ஜாதவ், அஸ்வின் சேர்க்கப்பட்டனர். கேதர் ஜாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கை அணியில் குசல் பெரேராவுக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெலா ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மெத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார். டிக்வெலாவும், ... Read More »

ஹிஜாபுக்காக போட்டியை துச்சமென மதித்து வெளியேறியது கத்தார் அணி

1911642_801535326579554_4727807351320242844_n-150x150

(MN) தென் கொரியாவில் இன்ஸான் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று (24) கத்தார் மற்றும் மொங்கோலிய பெண்கள் அணிகளுக்கிடையிலான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் கத்தார் வீராங்கணைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால், ஹிஜாப் அணிந்து விளையாட நடுவர் தடை விதித்தார். அப்போது, நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்குமிடையில் நடந்த நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகும் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி மறுத்ததால், தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டு அரங்கை விட்டு வெளியேறியது கட்டார் பெண்கள் அணி. ... Read More »

மட்டு.மாவட்ட கிரிக்கட்டில் சாதனை படைத்து வரும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகம்.

02-kpl-tropy-150x150

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் 30 வருடங்கள் பழைமை வய்ந்த ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழகம் அண்மைக் காலமாக கிரிக்கட் விளையாட்டில் சகலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், மட்டகளப்பு மாவட்டத்திலே கிரிக்கட் விளையாட்டில் பல வெற்றிகளைப்பெற்று வருவதானது, கல்குடாப் பிரதேசத்திலுள்ள கிரிக்கட் இரசிகர்களையும், பொது மக்களையும் பெரும் மகிழ்ச்சிக்குட்படுத்திய விடயமாகக் காணப்படுகின்றது. இதற்கு முக்கிய சான்றாக, 6 மாதங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்திலே இது வரை இடம்பெற்றிராத வகையில், மாவட்ட இரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைகழக மைதானத்தில் ஈஸ்ட்றன் சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகதினால் ஏற்பாடு ... Read More »

KPL T20 சாம்பியனாக ஓட்டமாவடி வளர் பிறை

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஒரு மாத காலமாக வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம் நாடத்தி வந்த KPL T20 அணிக்கு 20 ஓவர்களைக் கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்குடாவிலுள்ள பிரபல்யம் வாய்ந்த 24 கழகங்கள் பங்குபற்றின. இதில் இறுதிப்போட்டிக்கு ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழகமும், வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகமும் தகுதி பெற்று, இன்று இறுதிப் போட்டியில் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் (இன்று திங்கட் கிழமை08.09.2014) மோதின. கல்குடாவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பெருங்கோலாகலமாக இடம் பெற்ற இவ்விறுதிப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய வாழைச்சேனை நியூஸ்டார் ... Read More »

17 வருட டெஸ்ட் வாழ்வுக்கு மஹேல கண்ணீருடன் பிரியாவிடை

நன்றி-வீரகேசரி மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன. எனக்குப் பல வழிகளிலும் உதவி, ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், மனைவி, எனது கிரிக்கெட் இரசிகர்கள், இலங்கை கிரிக்கட் சபை, எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கழகம், பாடசாலை, பாடசாலை நண்பர்கள், பயிற்சியாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் அணி வீரர்கள் அனைருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக, இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான மஹேல ஜயவர்தன கண்ணீர் நிரம்பிய கண்களுடன் தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று நட்சத்திரமும் ஜாம்பவானுமாகிய மஹேல ஜயவர்தனவின் 17 வருட ... Read More »