Slider News

உள்ளூராட்சி தேர்தலை தாமதிக்காது நடாத்த வேண்டும் ரவூப் ஹக்கீம்.

download

பிரச்சினைகளும், சிக்கல்களும் இருந்தாலும் உள்ளூராட்சித் தேர்தலை மேலும் தாமதிக்காது நடாத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை (17) சீன அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் (நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினூடாக) பேராதனை பல்கலைக்கழகத்தில் இருபதாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கவுள்ள இனங்காணப்படாத சிறுநீரக் நோயிக்கான ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து கண்டி, றோயல் கண்டியன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் ... Read More »

மஹிந்த உடைத்தால் பொண் குடம் மைதிரி,ரனில் உடைத்தால் மண் குடம் ; இபாஸ் நபுஹான்.

unnamed

கிந்தோட்டை கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள் உடைப்பதை பாதுகாப்பு படை வீரர்களே முன்னின்றும் செய்தார்கள் இனவாதிகள் செய்வதற்கு அனுமதியளித்தார்கள் என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டை அப்பகுதி வாழ் மக்கள் கூறியுள்ளனர். இந்த விடயம் மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் மஹிந்த ஆர்மியை அனுப்பி முஸ்லிம்களை தாக்கியதாக அஸாத் சாலி முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் கூறியிருப்பார்கள் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார். அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த அரசானது முஸ்லிம்களின் பூரண ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும். இதன் மூலம் இலங்கையில் ... Read More »

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.தே.கூ. – மு.கா இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்துக! ஹிஸ்புல்லாஹ்

1-DSC_0627-8

(ஆர் ஹசன்) வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும் ஆபத்து குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசியலமைப்பு பேரவையில் கடந்த நவம்பர் 8ஆம் திகதி உரையாற்றியிருந்தார். இதனை சிலர் திரிவுபடுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் யாழ் மாவட்ட த.தே.கூ. நாடாளுமன்ற ... Read More »

ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் சிரமதான நிகழ்வு

IMG-20171119-WA0020

ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய நம்பிக்கையாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு நேற்று 19.11.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது. இச்சிரமதான நிகழ்வில் புதிய நம்பிக்கையாளர்கள் சபை உறுப்பினர், ஜமாஅத்தார்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து  கொண்டனர். புதிய நிருவாகம் பொறுப்பேற்ற பின்னர் இவ்வாறான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது பாராட்டத்தக்கது. இவைகளை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய பள்ளிவாயல்களும் செயற்பட வேண்டும். Read More »

ஓட்டமாவடி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்வு

11 (10)

கல்குடா செய்தியாளர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையில் நடைபெற்றது. நூலகர் திருமதி ஹப்சா மஜீட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ், ஓட்டமாவடி சமுர்த்தி வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீட், ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.சல்மான் வஹாப் மற்றும் மாணணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார். தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ... Read More »

இனக்குரோதங்களே முன்னேற்றத்துக்குத்தடை -மீராவோடையில் பிரதியமைச்சர் அமீர் அலி

01 (10)

எஸ்.எம்.எம்.முர்ஷித் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தின் பொறாமை, இனத்துவேசமிருந்து கொண்டிருக்குமென்றால், அது எங்களை முன்னேற விடாதென கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ்க்கிராமத்தில் தையல் பயிற்சிநெறியை முடித்த யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் அணைக்கட்டு அடிக்கல் நடும் நிகழ்வு புளியடித்துறை முற்றத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் ஆகியோரிடத்தில் வேறு சிந்தனைகள் உருவாக்கப்படுமாக இருந்தால், முயற்சிக்குத் தடையாக இருக்கும். அந்தத்தடையை ... Read More »

வாழைச்சேனை வை.அகமட்டில் மாணவர்கள் கௌரவிப்பும் வெளியேற்று விழாவும்-மேலதிக புகைப்படங்களுடன்

01 (17)

கல்குடா செய்தியாளர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை.அகமட் வித்தியாலய ஐந்தாந்தர மாணவர்கள் கௌரவிப்பும் வெளியேற்று விழாவும் கடந்த 18.1.2017ம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக நீதிபதி எம்.ஐ.றிஸ்வான் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப்பணிப்பாளர் என்.சிதம்பரமூர்த்தி, உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.ஜாபீர் கரீம், பிரதேச பாடசாலை அதிபர்கள், தொழிலதிபர்கள், பிரதேச பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலர் ... Read More »

செம்மண்ணோடை அல் ஹம்றாவுக்கு மூன்று இலட்சம் தருவதாக ஹனீபா (மம்மலி) விதானை வாக்குறுதி (வீடியோ)

கவர் போட்டோ

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் செம்மண்ணோடை அல்-ஹம்றா பாடசாலையில் நேற்று 19.11.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயலின் இணைத்தலைவருமான ஹனீபா (மம்மலி) விதானை மூன்று இலட்சம் ரூபாய்களை பாடசாலையின் சுற்று மதில் அமைப்பதற்கு உடனடியாகத்தருவதாக கொடுத்த வாக்குறுதி அரசியல் ரீதியாக மம்மலி விதானையின் காய்நகர்த்தலினையும், அவர் பிரதேச, சமூக ரீதியாக அவர் வைத்திருக்கும் ஈடுபாட்டினையும் எடுத்துக்காட்டும் விடயமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்குடாத்தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் எச்.எம்.எம் றியால் அவர்களும் ... Read More »

முக்கியத்துவமுள்ள பிரதேசமாக அடையாளப்படுத்த ஐந்து இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டும்- சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி (வீடியோ)

IMG_7130

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஒரு பிரதேசத்தினை முக்கியமான பிரதேசமாக அடையாளப்படுத்த அப்பிரதேசத்திலுள்ள சமூகமானது ஐந்து முக்கிய இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டுமென கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி தெரிவித்தார். கடந்த 12.11.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற சமூகத்திற்கு பணியாற்றியோர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியோர்களுக்கான பாராட்டு விழாவிலேயே மேற்கண்டவாறு விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி உரையாற்றினார். கல்குடா சரீப் அலி ஆசிரியர் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற குறித்த பாராட்டு விழாவில் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ... Read More »

மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்களே வடக்கு -கிழக்கு இணைவதை எதிர்க்கின்றனர் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

02

(பாறுக் ஷிஹான்) “மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர். வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால் அது கிழக்குத் தமிழல்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழர் தலைவரின் ( சம்பந்தனின்) திருமலையானது தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் என்று சொல்லக் கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை எனவும் அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரால் வாரந்தம் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த ... Read More »