அரசமைப்பை மீண்டுமொரு தடவை ஜனாதிபதி மீறிவிட்டாரென்று குற்றச்சாட்டு!

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, பொதுபல ​சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டதன் பின்னர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அவர், நேற்றுமாலை வெளியேறினார்.

ஜனாதிபதியினால் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள், நீதியமைச்சின் ஊடாக, சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்பின்னரே அவர், விடுவிக்கப்பட்டார்.

கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், அவருக்கு, 6 வருடங்கள் அனுபவிக்கும் வகையில் 19 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனையை கடந்தவரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி விதித்தது.

இதேவேளை, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட பொதுமன்னிப்பு, அரசமைப்பு முரணானது என்றும், அரசமைப்பை மீண்டுமொரு தடவை ஜனாதிபத மீறிவிட்டார் என்றும் பரவலாக குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதனிடையே, சிறைச்சாலையிலிருந்து பின்கதவினால் அழைத்துச் செல்லப்பட்ட ஞானசார தேரர், ருக்மல்கம விஹாரையில், வழிபாடுகளை முடித்துகொண்டு, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதற்கு நான் தயார். ஆனால், தியாகம் செய்வதற்கு நாடு இருக்கவேண்டும்” என்றார்.

Tm

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *