கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நோன்புப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவித்தல்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இம்முறை பெருநாள் தொழுகையை பள்ளிவாயல்களில் தொழுவதற்கான ஒழுங்குகளை ஜம்இய்யது தஃவத்தில் இஸ்லாமிய்யா கல்குடா மேற்கொண்டுள்ளது என்பதனை சகல சகோதர சகோதரிகளுக்கும் அறியத்தருகின்றோம் .இந்த வகையில் பெருநாள் தொழுகையானது நாளை காலை 6 .30 மணிக்கு பிரதானமாக தாருஸ்ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல் மீராவோடை, குபா ஜூம்மா பள்ளிவாயல் செம்மண்ஓடை, ஹிழ்ரிய்யா ஜூம்மா பள்ளிவாயல் மாஞ்சோலை, ஆகியவற்றில் ஆண்கள் பெண்களுக்கான தொழுகைகள் இடம் பெற உள்ளன.

இதேபோன்று ஜம்இய்யாவின் கீழுள்ள ஏனைய பிராந்திய பள்ளிவாயில்களிலும் பள்ளிவாசலின் வசதிக்கேற்ப தொழுவதற்கான வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே சகோதர சகோதரிகள் முடியுமான இடங்களுக்குச் சென்று தங்களது பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இவ்வண்ணம்,

தஃவாப் பிரிவு, ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடா ,
எம் பி சி எஸ் விதி, மீராவோடை, ஓட்டமாவடி.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *