சிலோன் மீடியா போரம் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி…

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

(எஸ்.அஷ்ரப்கான்)

இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு மூலம் நாட்டில் நிரந்தர சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட்டு இலங்கைத்திருநாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ பிரார்த்திக்கின்றோம் என்று சிலோன் மீடியா போரம் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் தேசியத் தலைவர் றியாத் ஏ மஜீத் இவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இஸ்லாமியர்களாகிய நாம் அமைதியாகவும் பொறுமையுடனும், செயற்பட்டு இப்புனிதமான பெருநாள் தினத்தில் எமது நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட அனைவரும் இரு கரமேந்தி பிரார்த்திக்கின்றோம்.

முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் அவதானமாகவும் பொறுமையுடனும் செயற்படவேண்டிய காலகட்டத்தில் வீண் விளையாட்டுக்கள் பொழுதுபோக்குகளை தவிர்த்து அமைதியாக இப்பெருநாளை கொண்டாட முன்வர வேண்டும்.

அண்மைய அசம்பாவிதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடுகின்ற அப்பாவி முஸ்லிம் சகோதர சகோதரிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களும் சகோதரத்துவத்துடனும் சௌஜன்யத்துடனும் வாழ்வதற்கு இப்புனித பெருநாள் தினத்தில் பிரார்த்திக்கின்றோம்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *