மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ ஈகைத் திருநாளில் பிரார்த்திப்போம் – சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

(அஷ்ரஃப்கான்)

இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு மூலம் நாட்டில் நிரந்தர சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட்டு இலங்கைத்திருநாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ பிரார்த்திப்போம் என சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத்ஏ.மஜீத் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்

இவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இஸ்லாமியர்களாகிய நாம் அமைதியாகவும் பொறுமையுடனும், செயற்பட்டு இப்புனிதமான பெருநாள் தினத்தில் எமதுநாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட அனைவரும் இரு கரமேந்தி பிரார்த்திக்க வேண்டும்.

முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் அவதானமாகவும் பொறுமையுடனும் செயற்படவேண்டிய காலகட்டத்தில் வீண்விளையாட்டுக்கள் பொழுதுபோக்குகளை தவிர்த்து அமைதியாக இப்பெருநாளை கொண்டாடவேண்டும்.

அண்மைய அசம்பாவிதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடுகின்ற அப்பாவி முஸ்லிம் சகோதரசகோதரிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களும் சகோதரத்துவத்துடனும்சௌஜன்யத்துடனும் வாழ்வதற்கு இப்புனித பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *