இனங்களுக்கிடையிலான ஐக்கியம் தழைத்தோங்கச் செய்யும் திருநாளாக இப்புனித நோன்புப் பெருநாள் அமைய வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

நோன்புப் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய உள்ளங்களுக்கு சாந்தி- சமாதானம் -சௌபாக்கியம் ஏற்பட எல்லாம் வல்ல இறைனை பிரார்த்திப்பதாக தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த ரமழான் மாதத்தில் பேணிவந்த நற்பண்புகளையும், நற்செயல்களையும், இறை அச்சத்தையும் எமது வாழ்நாள் முழுவதும் பேணிவருவதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக மாற முயற்சிக்க வேண்டும்.இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.

நாட்டு மக்கள் மத்தியில் சமத்துவம், சகோதரத்துவம், சுபீட்சம், இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் என்பவற்றை தழைத்து ஓங்கச் செய்யும் திருநாளாக இப்புனித நோன்புப் பெருநாள் அமைய வேண்டும்.

புனித ரமழான் மாதத்தில் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அமல்கள் பலவற்றை புரிந்து புடம்போடப்பட்ட இஸ்லாமிய உள்ளங்களாய் அல்லாஹ்வுடைய அன்பையும் அருளையும் நாடி நிற்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இம்மையும் மறுமையும் சிறக்க, வாழ்வில் வளம் கொழிக்க இதயம் கனிந்த இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *