தென்றலிலும் மின்சாரம் எடுக்கலாம்!

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

அதிவேகமாக காற்று வீசினால்தான், ராட்சத மின்விசிறிகளைக் கொண்ட காற்றாலைகள் சுழன்று மின்சாரம் தயாரிக்கும். ஆனால், தென்றல் போல வீசும் காற்றில் இவை பெரிதும் உதவாது.

அமெரிக்க ராணுவத்திற்காக, ‘டெக்லிங்’கின் கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்கியுள்ள ஒரு காற்றாலை, மெல்லிய காற்று வீசினாலே, அசைந்துக் கொடுத்து மின் உற்பத்தி செய்கிறது.

வீடுகளின் ஜன்னல்களை மறைக்க பயன்படும், ‘வெனீசியன் பிளைண்ட்’ என்ற பட்டையான திரைகளிலிருந்து உந்துதல் பெற்று உருவாக்கப்பட்டது இந்த தொழில்நுட்பம்.

மணிக்கு, 14 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றே இந்த ஆலைக்குப் போதுமானது. காற்றின் திசையில் சில பட்டைகளைக் கொண்ட இந்த கருவியை, வைத்துவிடவேண்டும். பட்டைகளை மேலும் கீழுமாகப் பிடித்திருக்க இரு குழாய்கள் உண்டு.

அடிப்பகுதி குழாயில் ஒரு தாமிரக் கம்பியும், காந்த அமைப்பும் உள்ளது. வீசும் காற்றில், பட்டைகள் இடவலமாக அல்லாடும்போது, கீழே உள்ள குழாயினுள் இருக்கும் கம்பி முன்னும் பின்னுமாக அசைகிறது.

இதனால் லேசான மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த மின்சாரத்தை மின்கலனில் சேமித்து வேண்டியபோது பயன்படுத்தலாம்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *