நாட்டில் மீண்டும் சில பாடசாலைகள் மூடப்படவுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் உள்ள 11 பாடசாலைகளை சில தினங்களுக்கு மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

பொசன் நிகழ்வுகளையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, அங்கு வருகை தரவுள்ள பிற மாகாணங்களை சேர்ந்த காவல்துறை உத்தியோகஸ்தர்களை, தங்கவைப்பதற்காகவே, குறித்த பாடசாலைகள் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளன.

இதன் காரணமாக, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலினை தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு சர்ச்சை காரணமாக நாட்டில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக சில வாரங்கள் தடைப்பட்டிருந்த.
இந்த நிலையில், ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தரப்பரீட்சை என்பன இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில்,  இவ்வாறு பாடசாலைகளை மூடப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது
இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *