அஸாத் சாலி பாரளுமன்ற தெரிவுக் குழுவிற்கு ஆதாரமில்லாமல் கருத்துக்களை முன்வைப்பதும் ஒரு பாரிய குற்றமே!

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

பள்ளிவாயல்களை பதிவு செய்வது வக்குப் சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற விடயமே தவிர ஒரு தனிப்பட்டவரின் பொறுப்பு அல்ல என்பதை நண்பர் அஸாத் சாலி புரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமய விவகார அமைச்சரும்  முஸ்லிம் கலாசார திணைக்களமும் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சார்ந்து நடக்க முடியாது என்பதை எனது நண்பர் அஸாத் சாலி புரிந்துகொள்ள முயற்சிக்க  வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.
அஸாத் சாலி அவர்கள் முன்னாள் அமைச்சர் கெளரவ அப்துல் ஹலீம் மற்றும் அவரது செயலாளர் பாஹிம் ஹாஷிம் தொடர்பில் முன்வைத்த பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
நண்பர் அஸாத் சாலி அவர்கள் நேற்றைய தினம் தபால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சரின் செயலாளர் பாஹிம் ஹாஷிம் அவர்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் கண்டிக்கத்தக்கது.
தௌஹீத் ஜாமாத் பள்ளிவாயல்களை பதிவு செய்ய சகோதரர் பாஹிம் முன்னெடுப்புகளை மேற்கொண்டதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.அவர் குறிப்பிடும் அவ்வாறான பள்ளிவாயல்கள் எவை என்பதையும் அந்த பள்ளிவாயல்களில் என்ன சட்டவிரோத செயல்கள்
இடம்பெற்றது என்பதையும் அவர் முன்வைக்கவில்லை.
வழமை போன்று எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாத விடயங்களை வாய்க்கு வந்தபடி பேசி இல்லாத பிரச்சினையை உருவாக்கி மீடியாக்களுக்கு தலைப்புச் செய்தி கொடுப்பதனால் முழு முஸ்லீம் சமூகத்துக்கும் வரக்கூடிய பின் விளைவுகளுக்கு அஸாத் சாலி பொறுப்புக்கூற வேண்டும் என்பதை நாம் இந்த இடத்தில் அவரிடன் எத்திவைக்க விரும்புகிறோம்.
மேலும் பள்ளிவாயல்களை பதிவு செய்வது வக்குப் சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற விடயமே தவிர ஒரு தனிப்பட்டவரின் பொறுப்பு அல்ல என்பதனையும் அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
பாரளுமன்ற தெரிவுக் குழுவிற்கு ஆதாரமில்லாமல் கருத்துக்களை முன்வைப்பதும் ஒரு பாரிய குற்றமே மேலும் அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் அவரது சகோதரர் பாஹிம் ஹாஷிம் அவர்களுக்கும் எதிராக பல முறை இவ்வாரான கருத்துக்களை அஸாத் சாலி முன்வைத்தாலும் ஒன்றுமே நிரூபிக்கப்படவில்லை.
எனவே ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமைக்கான நேரம் நெருங்கும் போது இவ்வாரான கருத்துக்களை அவர் தெரிவிப்பதன் உள்நோக்கம் என்ன என்பதனை நாம் அணைவரும் விழங்கிக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
-Razy Hashim-
இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *