6 இலட்சம் புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு உரித்துப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு.

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

6இலட்சம் புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இதில் சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே , பிரதியமைச்சர் பாலித தேவரபெரும , முன்னாள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா , முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி , சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சமன் பிரியந்த பண்டார , ஏறாவூர் நகர சபை தவிசாளர் வாஸித் , ஏறாவூர் பற்று தவிசாளர் நா.கதிரவேல் , உட்பட தினைக்கள தலைவர்கள் , பிரதேச செயலாளர்கள் , உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், சர்வமத பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும் 27,321 குடும்பங்கள் புதிதாக சமுர்த்தி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்ததுடன் இதற்கான ஏற்பாடுகள் அமச்சர் தயா கமகே தலைமையில் முன்னாள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா இன் மூலமாக ஏனைய அரசியல் பிரமுகர்களது பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச ரீதியாக விரைவில் புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்துப் படிவங்கள் நேரடியாக மக்களுக்கு கையளிக்கப்பட உள்ளதுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா வினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் பல புதிய குடும்பங்களை சமுர்த்தி திட்டத்திற்குள் உள்வாங்கி அவர்களை வலுவூட்டுவதற்கான முயற்சிகள் மற்றும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு விசேட அம்சமாகும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *