டொக்டர் ஷாபி அவ்வாறு செய்யவில்லை 69 தாதியர்கள் வாக்குமூலம்! 

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

குருநாகலை வைத்தியசாலையில் வைத்தியர் ஷாபியுடன் சிசேரியன் அறுவைச் சிகிச்சையில் பங்கேற்ற 69 தாதியரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது, வைத்தியர் ஷாபி, பெலோபியன் குழாய்க்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் எதனையும் தாம் காணவில்லை என, குருநாகல் வைத்தியசாலையின் தாதியர்  தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சிகிச்சை முறைகளில் எவ்வித ஔிவு மறைவும் இல்லையெனவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்,

சிசேரியன் சிகிச்சைகளின் போது வைத்தியர் ஷாபியு்டன் 70 தாதியர்கள் பணியாற்றியுள்ளதுடன் அவர்களுள் ஒருவரிடம் மாத்திரம் இதுவரை வாக்குமூலம்  பெற்றுக் கொள்ளப்படவில்லை என தெரியவருகின்றது.

குறித்த தாதி, கொழும்பு  தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையினாலேயே, அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது,

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *