ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்,ஊடகங்களைக்கட்டுப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளுக்கெதிரான கண்டன அறிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் அண்மைக்  காலமாக தமது ஊடகப்பணியினை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சிமன்றங்களினால் ஊடகங்களைக்கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதுடன், பொது மக்கள்தகவல்களை அறிந்து கொள்ளும்உரிமையும் மறுதலிக்கப்பட்டுவருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

அத்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின்வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேசசபையின் தவிசாளரினால் பிரதேசஊடகவியலாளரான கைலாயப்பிள்ளைஉருத்திரன் கடந்த வாரத்தில் அச்சுறுத்தப்படுள்ளார்,

அதே வேளை ஓட்டமாவடி – கோறளைப்பற்றுமேற்கு பிரதேச சபையினால் மாதாந்த சபைஅமர்வுகளில் சுயாதீனமாகஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புப்பணியினை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தும் மக்கள்மக்கள் தமது பிரதிநிதிகளினால்உள்ளூராட்சி மன்றங்களில்மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைஅறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள்வழங்கப்படாமை போன்ற முழுஜனநாயகத்துக்கு விரோதமானசெயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டுவருகின்றமை கவலையளிக்கின்றது.

மக்களின் குரலாகத்திகழ்கின்றஊடகவியலாளர்களின் குரல்நசுக்கப்படுகின்றமை இலங்கைஅரசியலமைப்பு வழங்கியிருக்கின்றஜனநாயக உரிமையை மறுக்கின்றமைபாரிய குற்றமாகும்.

மக்களுகளின் நலனுக்காக பல்வேறுதீர்மானங்களை நிறைவேற்றி அதனைநடைமுறைப்படுத்த வேண்டிய உள்ளூராட்சிமன்றங்கள் ஊடகங்களைக்கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களைநிறைவேற்றுதல், சுயாதீனமாகச்செயற்படுகின்ற ஊடகவியலாளர்களைஅச்சுறுத்துதல் முற்றிலும் ஜனநாயகத்துக்குவிரோதமான செயற்பாடாகும். இதனைகிழக்கு மாகாண ஊடகவியலாளர்ஒன்றியம் மிக வன்மையாகக்கண்டிக்கின்றது.

உண்மையைப் பொய்யுடன் கலக்காது,ஊடக தர்மத்தைப்பேணி பொறுப்புடன் ஒருசெய்தியை அறிக்கையிடுவது ஒருஊடகவியலாளனின் தலையாயகடமையாகும். அந்த வகையில், ஒருசெய்தியை அறிக்கையிடுகின்றசந்தர்ப்பத்தில் ஏற்படும் தவறுகளைச்சம்பந்தப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டவும்,அச்செய்திகளைத் திருத்தங்களுடன்மறுபிரசுரம் செய்யவும் ஊடக நிறுவனங்கள்தயாராக இருக்கின்றன.

இவ்வாறான நிலையில், அரசியல்வாதிகள்விடுகின்ற பிழைகளைச் சுட்டிக்காட்டுகின்றஊடக நிறுவனங்களையும்,ஊடகவியலாளர்களையும் தவறாகச்சித்தரிப்பதற்கும் புறக்கணிப்பதற்கும் சிலர்இவ்வாறான சபை தீர்மானங்களைமேற்கொள்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும்எமது மாவட்டத்தில் நடைபெறுமானால்,மக்கள் அரசியல்வாதிகளின்அடிமைகளாகவும் ஊடகங்கள் அவர்களின்ஊதுகுழலாக மாறி விடுமென்பதில் எவ்விதஐயமும் கிடையாது.

இதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்நசுக்கப்படும் நிலை உருவாவதுடன், மக்கள்சரியான தகவல்களை அறிந்து கொள்வதில்பாரிய சிக்கல்கள் உருவாகும் என கிழக்குமாகாண ஊடகவியலாளர் ஒன்றியமாகியநாம் அஞ்சுகின்றோம்.

இந்நிலை தொடர்வதனை தவிர்த்துசம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள்எதிர்காலங்களில் எமதுஊடகவியலாளர்கள் கௌரவமாகநடாத்தப்படுவதை உறுதிப்படுத்துதல்வேண்டும். அதே சந்தர்ப்பத்தில் அவர்களின்பணியினை சுயாதீனமாகவும்,சுதந்திரமாகவும் மேற்கொள்வதற்குஎவ்விதத் தடையையும் ஏற்படுத்தவேண்டாமென பகிரங்க வேண்டுகோள்விடுக்கின்றோம்.

எல்.தேவா.

தலைவர்,

-கிழக்கு மாகாண ஊடகவியலாளர்ஒன்றியம்

– மட்டக்களப்பு.

12.06.2019

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *