உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் 2 மில்லியன் ரூபா நிதியுதவி.

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்படுத்தியுள்ள நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது.

பல்வேறு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நாடெங்கும் நடத்தப்பட்ட இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த தாக்குதலால் இந்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டிக்காக பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிகளும் தடைப்பட்டதோடு, குறித்த சம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது நலன்புரி செயற்பாடான ‘Cricket Aid‘ மூலம் இலங்கை கிரிக்கெட், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tk

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *